காவிரி விவகாரம் குறித்து மோடியிடம்பேசும் துணிவு எடப்பாடியிடம் துளியும் கிடையாது – மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரம் குறித்து மோடியிடம்பேசும் துணிவு எடப்பாடியிடம் துளியும் கிடையாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார் புதுதில்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற உள்ளது இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுதில்லி சென்றுள்ளார் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமாக பிரதமர் மோடி யிடம் பேசுவேன் என கூறியிருந்தார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மே தின பொதுக்கூட்டம் ” தமிழக முதல்வராக டி டி வி தினகரன் பொறுப்பேற்க வேண்டும்” சி ஏழுமலை முழக்கம்!

வந்தவாசி: திருவண்ணாமலை நகரில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் கோலாகலமாக நடைபெற்றது எஸ் ஆர் தருமலிங்கம் மாவட்ட கழக செயலாளர் தெற்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போளூர் சி ஏழுமலை மாவட்ட கழக செயலாளர் வடக்கு வரவேற்புரை நிகழ்த்தினார் கழக அமைப்பு செயலாளர் சி கோபால் முன்னாள் எம்பி இரா காவேரி கழக மகளிரணி துணை செயலாளர் சிறப்புரை யாற்றினர் போளூர் சி ஏழுமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பேசும் போது தமிழகத்தின் முதல்வராக டி டி வி தினகரன் பொறுப்பேற்க வேண்டும் அதன் மூலம் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்லும் என குறிப்பிட்டார் பையூர் சந்தானம் மா அம்மா பேரவை செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் உரையாடினார் தமிழக முதல்வர்!

சென்னை: சேலத்திலிருந்து திருவாரூர் பொதுக்கூட்டத்திற்குசெல்லும் வழியில் நீடாமங்கலத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் நேரில் சந்தித்து உரையாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உடன் உணவுத் துறை அமைச்சர் ஆர் காமராஜ்

தமிழக முதல்வர் ஆளுநரை சந்தித்தார்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை இதனால் தமிழகத்தில் தொடர்போராட்டங்கள்நடந்து வருகின்றன இதுகுறித்து தமிழக முதல்வர் இபிஎஸ் ம் துணை முதல்வர் ஒபிஎஸ் ம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்

திருவாரூர் மாவட்டம் மத்திய அரசின் அதிரடி படை குவிப்பு பதட்டநிலையில் காவிரி டெல்டா பகுதிகள்!

சென்னை: திருவாரூர் டெல்டா மாவட்டங்களில் நிலைகொண்டிருந்த மத்திய அரசின் துணை ராணுவப் படையினர் அதிரடி படையினர் வாபஸ் பெறப்பட்டனர் மன்னார்குடி கூத்தாநல்லூர் பகுதிகளில் துணை ராணுவத்தினர் 2000 பேர் வந்திறங்கி ஆங்காங்கே அணிவகுப்பு நடத்தி வருகின்றனர் என கூறப்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் இச்செயலால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது அமைதியான மக்களுக்கு எதிராக அதிரடி படை குவிக்க வேண்டிய அவசியம் என்ன? என நடுநிலையாளர்களைசிந்திக்க வைத்துள்ள சூழலில் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் துணை ராணுவம் அதிரடியாக வாபஸ் பெறப்பட்டது

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு; மெரினாவில் போராட்டம் நடத்த தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சினைக்காக மெரினாவில் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனு மதி வழங்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ராஜா முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜ ரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ‘‘மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என அரசும் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்வர், துணை முதல்வர் பங்கேற்ற உண்ணாவிரதம்கூட சேப்பாக்கத்தில் தான் நடந்தது. எனவே பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஏற்கெனவே சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் அல் லது வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளில் மனுதாரர் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கலாம்’’ என தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யாத்துரை, ‘‘சுதந்திரப் போராட்டத்தின்போது கூட மெரினாவில் காந்தியடிகள் முதற்கொண்டு பலர் அறவழியில் போராட்டம் நடத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக நடந்த தன்னெழுச்சிப் போராட்டமும் மெரினா வில் நடந்ததால்தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 90 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்’’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக் கின் தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார்.

ஒருநாள் உண்ணாவிரதம்

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி டி.ராஜா, ‘‘மெரினாவைவிட காவிரிதான் முக்கியம். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பாகக்கூட போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, மனுதாரர் காவிரி பிரச்சினைக்காக மெரினாவில் ஒருநாள் மட்டும் அறவழியில் உண்ணாவிரதம் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மனுதாரருக்கு உரிய பாதுகாப்பை போலீ ஸார் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

அரசு மேல்முறையீடு

தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்போவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் நேற்று மாலை கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன் முறையீடு செய்தார்.

இதன்பேரில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பாக முறையிடுமாறு தலைமை நீதிபதி அப்போது அறிவுறுத்தினார்.

அதன்படி, அரசு தரப்பில் உடனடியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று இரவு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்தது. கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘‘போராட் டம் நடத்துவதற்கு நாங்கள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. ஆனால், மெரினாவில் நடத்த வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். எங்கள் தரப்பு வாதங்களை தனி நீதிபதி கருத் தில் கொள்ளாமல் மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்துள்ளார். அய்யாக்கண்ணு போலவே இன்னும் 25 சங்கத்தினர் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளனர். அய்யாக்கண்ணுவை அனுமதித்தால் பின்னர் அதுவே வாடிக்கையாகிவிடும். வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம், காயிதே மில்லத் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் மனுதாரர் உண்ணாவிரதம் இருக்கலாம். சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால்தான் மெரினாவில் அனுமதி மறுக்கப்படுகிறது’’ என வாதிட்டார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அய்யாத்துரை, ‘‘சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும்கூட மெரினாவில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. மெரினாவில் போராட் டம் நடத்தினால் பொது மக்களுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதிக்கப்படுகிறது. அரசு குறிப்பிடும் 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து உண்ணாவிரதம் இருக்க மனுதாரர் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை காவல் துறை முறையாக பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்’’ என உத்தர விட்டனர்.