பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (புதன்

கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றவர்களின் பட்டியல் (Rank List) வெளியிடும் முறை கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படுவதையும், தேவையில்லாமல் பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமில்லாத போட்டி உருவாவதை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.

எனவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வு ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது. 1200-க்கு 1100-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர், 1000-க்கு மேல் எடுத்தவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்களும், பாடவாரியாக 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை விவரங்களும் மட்டுமே வெளியிடப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *