தமிழகத்தில் 3000 அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

வந்தவாசி: தமிழகத்தில் 3000 அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் கூறினார் செய்யாறுக்கு அருகே செங்காடு கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியின் 57 வது ஆண்டுவிழா கொண்டாட்டம் முதன்மைகல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெ‌ற்றது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசும்போது:- தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்ப்படுத்தி இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்கிய புரட்சித் தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களின் வழியில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது 14 வகையான நலத் திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அவர்கள் பயன்பெறும் வகையில் 412 நீட் தேர்வு சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது 3000 அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது சிறந்த ஆசிரியர்களுக்கு விருது சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது மேலும் சிறந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 2 லட்ச ரூபாய் உயர்நிலைப்பள்ளிக்கு 1 லட்சரூபாய் நடுநிலைப்பள்ளிக்கு 75 ஆயிரம் ரூபாய் தொடக்கப்பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது இவ்வாறு பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *