எதற்க்கெடுத்தாலும் கவர்னர் மீது பழி போடுகிறார்கள்புதுச்சேரிமுன்னாள் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: எதற்க்கெடுத்தாலும் கவர்னர் மீது பழி போடுகிறார்கள் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புதுச்சேரி சட்டபேரவை எதிர்கட்சி தலைவரும் அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி நிருபர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார் மேலும் கூறும்போது:- கவர்னர் மாளிகையில் கோப்புகள் தேங்கி கிடக்கின்றன நலப்பணித் திட்டங்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டை யாக இருக்கிறார் என கூறும் ஆட்சியாளர்கள் மற்றொரு பக்கம் அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து பேசிவருகின்றனர் இது எப்படியான நாடகம் என்பது புரியவில்லை சென்டாக் நிதி யுதவிவழங்கபடவில்லை அங்கன்வாடி மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சம்பளம் தரப்படவில்லை சட்டமன்ற உறுப்பினர் களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கபடவில்லை இதனால் பொதுப்பணித் துறை மூலம் மேம்பாட்டு பணிகளை தொகுதி களில் மேற்க்கொள்ள முடியவில்லை ஆட்சியாளர்கள் மாநில வளர்ச்சி யின் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் கூறுகின்றார் கொலை கொள்ளை திருட்டு வழிப்பறி நடந்து கொண்டிருக்கிறது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசு இருக்கலாமா? என பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *