செய்யார் காவிரி நதி நீர் மீட்புப்போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம்

செய்யார்: காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்த இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழியில் சிறப்பாக நடைபெற்றுவரும் அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெற்றி விழா பொதுக்கூட்டம் இசைப் பேச்சரங்கம் மாவட்ட கழக இணை செயலாளர் விமலாமகேந்திரன் தலைமையில் நடைபெற்றது வே குணசீலன் மு எம்எல்ஏ எ அருணகிரி மாவட்ட அ தொ செயலாளர் எம் மகேந்திரன் ஒ மாணவரணி செயலாளர் டி ராஜி ஒ து செயலாளர் டி பி துரை ஒ அவைத் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் தூசி கே மோகன் எம்எல்ஏ மாவட்ட கழக செயலாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் தலைமை கழக பேச்சாளர் விழுப்புரம் எல் செல்வராஜ் உட்பட ஆயிரக்கணக்கானபொதுமக்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர் நகர கழக செயலாளர் ஜனார்த்தனம் நன்றியுரையாற்றினார்

மயிலாடுதுறை அதிமுக சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏர்கலப்பை பூட்டியமாடுகள் அன்பளிப்பு!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற காவிரி நதி நீர் மீட்புப்போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் நாகை மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஒ எஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமை களை மீட்டெடுக்கும் வகையில் சட்டபோராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த புரட்சி தலைவி அம்மா வின் பொற்கால ஆட்சி தனை நடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நாகை மாவட்ட அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் ஏர்கலப்பை பூட்டியமாடுகள் எடப்பாடி பழனிசாமிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன இவ்வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

காவிரி பங்கீடு பிரதமர் மோடி யை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி

சென்னை: காவிரி நீர் பங்கீடு சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடி யை கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்தித்து பேசவுள்ளார் தற்போது கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரித்துள்ளது விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி திறந்துவிடபட்டுள்ளது கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகமாக மழை பெய்து வருவதுதான் காரணம் ஆனால் முறைப்படி நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி வாரியம் அமைக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் இறந்த தொழிலாளர்களுக்கு தலா 5 லட்சம் நிவாரண உதவி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொலக்குணம் கிராமத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் குமார் தங்கராஜ் ஆகியோர் மண்சரிந்து இறந்து போயினர் இதை அறிந்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் உடனடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு சென்றார் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரை வரவழைத்து தலா 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் வைப்பு நிதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் உடன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர்கபில் தலைமைச்செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர் 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆசி பெற்றார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

சென்னை: தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி யை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் சந்தித்து 2018-19ம் ஆண்டிற்கான இந்துசமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக வாழ்த்து பெற்றார்

காங்கிரஸ் இஃப்தார் விருந்தில் பிரணாப் முகர்ஜி!

புதுதில்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார் சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் அழைக்கவில்லை என கூறப்பட்டது பாஜ பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் இஃப்தார் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவித்தது யூகங்களையும் வதந்திகளையும் தவிடு பொடியாக்கினார் பிரணாப் கடந்த இரண்டு வருடங்களாக முன்னாள் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இஃப்தார் விருந்து அளிக்காமல் இருந்தார் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்து பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்து பாஜ வை கேவலப்படுத்திவிட்டார் ராஜதந்திரத்தில் சோனியா வை மிஞ்சி விட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்

வரலாற்றில் முதன்முறை: உலகமே வியந்து பார்த்த கிம்- ட்ரம்ப் சந்திப்பு


வடகொரியாவும், அமெரிக்காவும் ஜென்ம எதிரிகளாக கருதப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவர்கள் கிம் -ட்ரம்ப் இருவரும் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேசினர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பதிவு செய்ய உலகம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் திரண்டனர். உலகின் பல நாடுகளிலும் இந்த சந்திப்பு நிகழ்ச்சி பெரிய திரைகளில் நேரலையாக ஒளிபரப்பானது.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்றது. வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், ட்ரம்பை சந்திக்க கிம் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து ஜூன் 12-ல் சிங்கப்பூரில் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து அதிபர் கிம் ஜாங் உன், ‘ஏர் சீனா’ விமானத்தில் நேற்று முன்தினம் சிங்கப்பூர் வந்தடைந்தார். பின்னர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை அதிபர் கிம் சந்தித்துப் பேசினார். இதுபோல, சிங்கப்பூருக் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வந்த டொனால்டு ட்ரம்ப், அங்குள்ள ஷாங்கிரி-லா ஓட்டலில் தங்கினார்.

வரலாற்றில் முதன்முறை

இதைத்தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப்பும் அதிபர் கிம்மும் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இன்று சந்தித்தனர். இருநாடுகளும் ஜென்ம எதிரிகளாக வர்ணிக்கப்பட்ட நிலையில் அதன் தலைவர்கள் சந்தித்து கொள்வதை உலகம் முழுவதும ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதன்படி, இன்று காலை இருதலைவர்களும் முதலில் தனியாக நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கினர். வசைபாடியவர்கள் நேரில் சந்தித்து கொண்டதால் இருவரிடையே சிறிது நேரம் தர்மசங்கடம் நிலவியது. அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் கைகுலுக்கினர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக ‘போஸ்’ கொடுத்தனர். உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கை, ஊடகவியலாளர்கள் காமிரா இந்த காட்சியை படம் பிடித்தது.

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது.. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசத்தனர்.

வியந்து பார்த்த உலகம்

வடகொரியா- அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொண்டதை உலகமே உற்று நோக்கியது. பல நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள், இணையதள செய்தி நிறுவனங்கள், அதிக முக்கியத்துவத்துடன் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை வெளியிட்டன. கிம்- ட்ரம்ப் சந்திப்பை வடகொரியா மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தொலைக்காட்சிகளில் பார்த்தனர்.

வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் உள்ள ரயில் நிலையத்தில், பிரம்மாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு வடகொரிய அதிபரின் செயல்பாடுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ட்ரம்ப், கிம் தங்கியுள்ள ஹோட்டல்கள், அவர்கள் சந்தித்துப் பேசும் ஹோட்டல் உட்பட சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக நன்மை கருதி இரு தலைவர்களின் சந்திப்புக்காக ரூ.135 கோடி செலவிடப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

” எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் ” – மு.க.ஸ்டாலின்

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டுமெனதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் மேலும் கூறும்போது “அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் இறப்புக்கு காரணமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டி ஜி பி உளவுத்துறை ஐ ஜி ஆகியோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் “என்றார்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிவாரண உதவி பத்து லட்சத்திலிருந்து இருபது லட்சமாக உயர்த்தி ஆணை பிறப்பித்தார் எடப்பாடி பழனிசாமி

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 13 பேர் கொல்லப்பட்டனர் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில் எடப்பாடிஅரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகிறார் இந்நிலையில் துப்பாக்கி சூட்டுக்கு பலியானவர்களுக்கு தலா பத்து லட்சத்திலிருந்து இருபது லட்சமாக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்

கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்தார்

புதுதில்லி : கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி யை புதுதில்லி யில் நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார் தொடர்ந்து தான் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு விடுத்தார்

புதுதில்லி : கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி யை புதுதில்லி யில் நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார் தொடர்ந்து தான் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு விடுத்தார்

புதுதில்லி : கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி யை புதுதில்லி யில் நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார் தொடர்ந்து தான் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு விடுத்தார்